Followers

Wednesday, October 23, 2019

தெய்வத்தின் குரல்



அம்பாளோட சரணம் தான் கதி
"நமக்கு ரொம்ப துக்கமோ, கஷ்டமோ வரச்சே, அம்பாள் பேர்ல கோபம் வர்றது ஸஹஜம். அம்பாள் நம்மள தண்டிச்சு கஷ்டம் குடுக்கற மாதிரிதோணினாலும், அவ மேல இருக்கற பக்தியை மட்டும் விட்டுடக்கூடாது! இன்னும் ஜாஸ்தியா நம்பிக்கை வெக்கணும். செல ஸமயம் அம்மா கொழந்தையை கோவிச்சுக்கறா.! ஓங்கி ரெண்டு அடி கூட வெக்கறா !
அப்போ, கொழந்தை நெஜமா துக்கப்படறது!... ''!-ன்னு அழறது...! ஆனா, ஒடனே எந்த அம்மா அடிச்சாளோ... அவகிட்டயேதான் அது போறது... அடிச்ச கையையே பிடிச்சிக்கறது. அவளோட காலையே கட்டிண்டு அழறது...
....அதுமாதிரி, அம்பாளோட கொழந்தேளான நாமளும், துக்கம் வந்தா... அம்பாள்தான் அந்தக் கஷ்டத்தை குடுத்தா-ன்னு நெனச்சா... "எனக்கேம்மா இந்த தண்டனையைக் குடுத்தே? என்னால தாங்க முடியலியே ! ஒன்னை விட்டா... எனக்கு வேற யாரு இருக்கா?.." ன்னு அவ பாதத்தையே பிடிச்சிண்டு அழணும்.! மறுபடியும் அவகிட்டதான் போயாகணும்! வேற வழியே இல்ல!..."



No comments: