முலிகை சப்பாத்தி
தேவை: கோதுமை மாவு ஒரு கப், தூதுவளை கீரை ஒரு கப், (நடுவில் உள்ள முள்ளை நீக்கி, சுத்தம் செய்த கொழுந்து கீரை) புதினா ஒரு கட்டு, பச்சை மிளகாய் மூன்று, உப்பு தேவைக்கு, நெய் ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி ஒரு சிறுதுண்டு.
செய்முறை: தூதுவளை கீரை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். புதினாவை சுத்தம் செய்து மண் போக அலசி, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாய்,இஞ்சி,உப்பு மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாயகன்ற ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு, ஒரு ஸ்பூன் நெய், அரைத்த விழுது, கீரை வகைகள் எல்லாவற்றையும் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவுபோல் கெட்டியாக பிசைந்து பாத்திரத்தில் வைத்து மூடி, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, சப்பாத்தி மாவை மீடியம் சைஸ் உருண்டையாக உருட்டி, சப்பாத்தி சிறியதாக செய்து, நடுவில் ஒரு ஸ்பூன் நெய் தடவி, முக்கோணமாக மடித்து, மறுபடியும் சப்பாத்திகளாக திரட்டவும். தோசைக் கல்லில், நெய்விட்டு சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.
இந்த முலிகை சப்பாத்தி நம்மை சளி தொந்தரவிலிருந்து காக்கும்.
Wednesday, April 28, 2010
முலிகை சப்பாத்தி நம்மை சளி தொந்தரவிலிருந்து காக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment