முளைப் பயிறு சப்பாத்தி
தேவையானப் பொருட்கள்: முளைப்பயிறு முக்கால் கப், பெரிய வெங்காயம் ஒன்று, நாட்டுத்தக்காளி இரண்டு, கரம் மசாலா பொடி, சீரகம்ப்பொடி, மிளகாய்ப்பொடி தலா அரை டீஸ்பூன், மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், பூண்டு நான்கு பல், உப்பு ருசிக்கேற்ப.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு ஒரு டீஸ்பூன், எண்ணை ஊற்றி பிசைந்து எடுக்கவும்.
முளைப்பயிறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணைவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு இவற்றை வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய தக்காளியைப்போட்டு நன்கு வதக்கவும்.
வதக்கிய பின் பொடி வகைகளைச் சேர்த்து சற்று நீர் தெளித்து பச்சை வாடைப்போக வதக்கவும். வேக வைத்துள்ள பச்சைப்பயிறு சற்று மசித்து, வதக்கிப் பொருட்களுடன் சேர்த்து கிளறவும். தேவையான உப்பு சேர்த்து கலந்து, வாணலியில் எல்லாம் ஒன்றாக சேர்த்து கிளறி வதக்கி இறக்கி ஆற வைக்கவும். (பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கலாம்) இரு மெல்லிய சப்பாத்திகள் இடவும்.
ஒரு சப்பாத்தி நடுவே பூரணத்தை பரவலாக வைத்து, மேலே இண்ணொரு சப்பாத்தி வைத்துமூடி, ஒரங்களை ஒட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வெந்தபின் எடுக்கவும்.
Thursday, April 29, 2010
முளைப் பயிறு சப்பாத்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment