Followers

Friday, November 8, 2013

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்...!

அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் வேண்டினார்.

“நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்”.

மேலதிகாரியும் அனுமதித்தார்.

வேலை மும்முரத்தில் மூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்த போது மணி இரவு எட்டரை. பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்ற பயத்துடன் போனார்.

வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். “குழந்தைகள் எங்கே..?” கேட்டதும் மனைவி சொன்னார்.

“சரியாக ஐந்தரை மணிக்குக் கிளம்பி கண்காட்சிக்குப் போய்விட்டார்கள். உங்கள் மேலதிகாரிதான் வந்து அழைத்துப் போனார்” என்று.

விஞ்ஞானி வேலையில் மூழ்கிவிட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பவில்லை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பவில்லை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார்...

அந்த மேலதிகாரியின் பெயர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்...!

No comments: