Followers

Wednesday, October 11, 2017

தொடரும் ஐ.டி பணியிழப்புகள்!


தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி) பணியிழப்புகள் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடரும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
ஐ.டி துறையில் கடந்த சில மாதங்களாகவே பணிநீக்கம் நடந்து வருவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் காரணமாகவே பணியிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் தற்போது இந்திய தகவல் தொழில்நுட்ப மனித ஆற்றல் குழு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில், “ஐ.டி துறையில் பணியிழப்புகள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். ஜூனியர் மற்றும் இடைநிலைப் பணிகளில் பணிநீக்கம் அதிகமாக இருக்கும். சீனியர் நிலைகளில் நாடு முழுவதும் 500 பணியிழப்புகள் வரை இருக்கும்.
இந்த நிலைமை அடுத்த ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலும் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் ஐ.டி பணியாளர்களிடம் திறமைகளை நிர்வாகம் கூடுதலாக எதிர்பார்க்கும். நிறுவனங்கள் அதிகமாக இளைய வயதினரையே விரும்பும். இதுகுறித்து எக்ஸ்பெரீஸ் தலைவர் மன்மீத் கூறும்போது, ‘மென்பொருள் சேவைகளில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வரவிருக்கின்றன. கிளவுட் சார்ந்த நிறுவன திட்டமிடல், செயற்கை நுண்ணறிவு, அதிகபட்ச வேகம், செலவு மற்றும் துல்லியம் போன்றவை ஐ.டி துறையில் பாதுகாப்பாக இயங்கத் தேவைப்படுகின்றன’ என்கிறார். எனவே ஐ.டி துறையில் இளைய வயதினருக்கே அதிக முன்னுரிமையை நிறுவனங்கள் வழங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
எனவே ஐ.டி பணியாளர்கள் பணியிழப்பைத் தவிர்க்க தங்களுடைய திறமை மற்றும் புதிய மென்பொருள் செயல்பாடுகள் குறித்துப் போதிய அறிவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

No comments: