Followers

Tuesday, December 5, 2017

இந்துக்களே, பக்தர்களே, ஆன்மீக பற்றாளர்களே விழிப்புணர்வு கொள்ளுங்கள்.

இந்து சமய தர்ம போராளி, பா.ஜ.க தேசிய செயளாலர் மதிப்புகுரிய ஹெச். ராஜா ஜி அவர்கள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் காணா அதிசயம்.இந்த சமய கோயில்களை ஆய்வு செய்த முதல் அரசியல்வாதி இவர்களே. இனி இந்து சமய அறமற்றதுறைக்கு அழிவு நிச்சயம்.பல கோயில்களுக்கு விடிவுகாலம் ஏற்படுவது உறுதி.
கடந்த ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில், திராவிட, நாத்தீக, மிஷனரி கொள்கையில் வளர்ந்த அதிகாரிகளை கொண்டு செயல்பட்ட இந்து சமய அறமற்றதுறை.கோயில்களை பற்றி, ஆகமங்களை பற்றி, சாஸ்திர சம்பிரதாயங்களை பற்றி கொஞ்சமும் அடிப்படை அறிவு கூட இல்லாத அதிகாரிகளைக் கொண்டு இயங்கிய துறை இந்த துறை.
அமீனா புகுந்த வீடு உருப்படாது என்பார்கள்.அதேபோல் அறமற்ற துறை புகுந்த கோயிலும் உருப்படாது. இதுவே கடந்த ஐம்பது ஆண்டு வரலாறு.
இன்றும் கோயில்கள் இயங்குகின்றது என்றால் அது பக்தர்களால், ஆன்மீக நல் உள்ளங்களால்.
கோயில் சொத்துகளை திராவிடவாதிகள் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட துறையே அறமற்றதுறை.
இந்து முன்னனி, இந்துமக்கள் கட்சி, ஆலயவழிபடுவோர் சங்கம் போன்றோர் ஏற்கனவே அறநிலையத்துறை ஊழலை முறைகேட்டை எதிர்த்து போராடிவருகின்றார்கள்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக திரு. ராஜா ஜி அவர்கள் கோயில்களை ஆய்வு செய்து வருவது, அறமற்றத்துறையை ஆட்டம் காணச் செய்துள்ளது.பக்தர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.முதலில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஆய்வு தொடரவேண்டும்.அவ்வாறு தொடர்ந்தால்தான் கோயில்களை பற்றிய விழிப்புணர்வை இந்துக்களிடம் மேலும் கொண்டுவரமுடியும்.
பழவேற்காடு ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோயிலை ஆய்வுசெய்து, நான்கு ஆண்டுகளாக தீபம் ஏற்றாமல் இருந்த கோயிலில் தீபம் ஏற்ற வைத்துள்ளார்கள்.
கும்பகோணம் அருகே ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மானம்பாடி சிவாலயத்தை அறமற்றதுறை சீர்குலைத்து வைத்துள்ளதை பார்வையிட்டுகண்டித்துள்ளார்கள்.
இவர்கள் அளித்த பேட்டி அறிக்கையில்,
1)இந்துசமய அறமற்றத்துறை இந்துகோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என்றும்,
2)கோயில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் இல்லை என்றால், Eo,Ac,Dc இவர்களுக்கு மட்டும் சம்பளம் எதற்க்கு, கோயில்களுக்கு பூசாரிதான் முக்கியம், ரௌடி Eo அல்ல என்றும்,
3)தன் நிர்வாகத்தில் உள்ள கோயில்களில் ஒரு வேளை தீபம் ஏற்ற, ஒரு கால பூஜை செய்ய வக்கில்லாத அறமற்ற துறை எதற்க்கு நிர்வாக செய்யவேண்டும் என்றும்,
4)கோயில் வருமானத்தில் 45% (கோயில் உண்டியல் பணம் மற்றும் கோயில் சீட்டு வருமானத்தில்)எடுத்து Eo வுக்கும் Ac,Dc க்கு சம்பளம் என்று எடுத்துக்கொள்ளும் அறமற்றதுறை இந்து சமய வளர்ச்சிக்கு செய்தது என்ன என்றும்,
(பக்தர்களே நீங்கள் போடும் உண்டியல் காசு சாமிக்கு என்று நினைக்கின்றீர்கள், ஆனால் உங்கள் உண்டியல் காசு அதிகாரிகளின் செலவுக்கே என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.)
5)இந்து சமய அறநிலையத்துறை, இந்து சமய அழிப்புத் துறையாக செயல்படுகின்றது என்றும்,
6)கோயில் Eo க்கள் எல்லாம் ரௌடிகள் போல் செயல்படுகிறார்கள், பக்தர்களை மிரட்டுகின்றார்கள், என்றும்,
7)கோயில்களுக்கு பக்தர்கள் செய்யும் உபயத்திற்க்கே கமிஷன் கேட்கும் அறமற்றதுறை என்றும்,
8)வேதாரண்யம், வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான17,000 ஏக்கர் நிலங்களை, கார்ப்பரேட் செக்டர் கெமிக்கல் எடுக்க அறமற்ற துறை ஒரு ஏக்கருக்கு ₹ 2,35 நயாபைசா குத்தகைக்கு விட்டுள்ளதை கண்டித்தும்,
(தமிழகத்தில் வேதாரண்யம் கோயிலுக்கு மட்டும் அதிகம் நிலம் இருக்ககாரணம், அக்கோயிலில் ஒரு எலி விளக்கை தூண்டி அடுத்த பிறவியில் மாவலி சக்கரவர்த்தியாக பிறந்த வரலாறை கொண்டு, அக்கோயிலுக்கு விளக்கு ஏற்ற, நம் முன்னோர்கள் கொடுத்த நிலங்கள் அவை அனைத்தும் .)
8)மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கிரீன்வேஸ் ரோடில் உள்ள 350 கிரவுண் நிலம் வெறும் ₹350 க்கு தரப்பட்டுள்ளது.ஆனால் அங்கு மார்கெட் ரேட் 5To 10 கோடி. இதனை கண்டித்தும்,
9)தமிழக கோயில்களை இந்துசமய அறமற்றதுறையே சூரையாடிவருகின்றது என்றும், துலுக்க படையெடுப்பால் இழந்த கோயில்களைவிட இந்துசமய அறமற்றதுறை இடித்த கோயில்கள் அதிகம் என்றும்,
10)தமிழகத்தில் 38,000கோயில்களில் 30000கோயில்களுக்கு Eo செல்வதே இல்லை, எந்த உதவியும் செய்வதில்லை. இவ்வாறு நிலை இருக்க இக்கோயில்களுக்கு நிர்வாக அதிகாரி என்று ஒரு Eo வெட்டியாய் எதற்க்கு என்றும்,
11)தீபமே ஏற்றாத, பூஜையே நடக்காத செயல்படாத கோயில்களுக்கு, செயல் அலுவலர் ஒருவர் எதற்க்குஎன்றும்,
12)தமிழகத்தில் பகவானை பட்டினி போட்டால், இயற்க்கை சீற்றம் ஏற்படும், இயற்கை அழிவு உண்டு என்றும்,
13)இந்துக்களின் கோயில்களை நிர்வாகிக்க இந்து சான்றோர்களும், ஆன்றோர்களும் கொண்ட தனிஅமைப்பு வேண்டும் என்றும்,
(இங்கு ஒன்றில் கவனமாக இருக்கவேண்டும் .சீசனுக்கு குற்றாலம் செல்வதுபோல், சீசனுக்கு இந்துவாக மாறுபவன் உள்ளான்.அவனை எல்லாம் இந்து என்று கொள்ளாமல், இந்து தர்மத்தை தமது வாழ்வியல் நடைமுறைகளாக கடைபிடிக்கும் சான்றோர்களை நியமிக்கவேண்டும் )
14)அறமற்ற துறை நிர்வாகத்தில் உள்ள 38,420 கோயில்களை ஒழுங்காக நிர்வாகம் செய்ய வக்கில்லாத, திராணியற்ற, ஒரு தீபம் ஏற்ற முயற்ச்சிக்காத அறமற்றதுறையே கோயிலை எங்களிடம் விடுங்கள் .38 மாதத்தில் இந்துகோயில்களை சரிசெய்து காண்பிக்கின்றோம் என்றும்,
அறைகூவல் விடுத்துள்ளார்.இது தமிழகம் காணா அதிசயம்.
காரணம் இதுவரை கோயில் சொத்துகளை எவ்வாறு கொள்ளை அடிக்கலாம் என்று திட்டமிட்ட அரசியல்வாதிகளை பார்த்த நாம், இன்று கோயில்களை காப்பாற்ற சீரமைக்க ஒருவர் தோன்றியுள்ளார்.
கிராமம், நகரம், மாநகரம் என்று எந்த இடத்தை எடுத்துக்கொண்டாலும், அங்கு மிகப்பெரிய நில உடைமைதாரர் அவ்வூர் இறைவனே.இன்றைய மார்க்கெட் நிலவரப்படி கணக்கிட்டால், கோயில் சொத்துகளை கொண்டு ஒவ்வொரு கோயில்களையும் தங்கத்தால் இழைக்கலாம்.ஆனால் இவ்வளவு சொத்துகளைக் கொண்ட நம் கோயில்கள் ஒருவேளை தீபம் இன்றியும், ஒரு கால பூஜை இன்றியும் உள்ளது.இந்நிலைக்கு காரணம் என்ன?
கடவுள் இல்லை என்று நாத்தீகம் பேசி கடந்த ஐம்பது ஆண்டு திராவிட அரசுகள், சிவன் சொத்து குலநாசம் என்ற பயத்தை, அறத்தை சீர்க்குலைத்ததே இதற்க்கு காரணம்.
மாற்றம் வந்தே தீரும்.
இந்துக்களே, பக்தர்களே, ஆன்மீக பற்றாளர்களே விழிப்புணர்வு கொள்ளுங்கள்.திரு.H. ராஜா அவர்களின் கரங்களை வலுப்படுத்துங்கள்.
நன்றி.சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம்.
Forwarded as received

No comments: