Followers

Wednesday, January 28, 2009

அவல் லட்டு


தேவையானவை:


அவல் ஒரு கப்
பொட்டுக்கடலை (உடைத்தது) அரை கப்
முந்திரி ஆறு
காய்ந்த திராட்சை ஆறு
பால் அரை கப்
சர்க்கரை ஒரு கப்
தேங்காய் துருவல் இரண்டு கப்
ஏலக்காய், நெய், கடைகளில் விற்கும் லட்டுகள் தேவையான அளவு.

செய்முறை:

அவல், உடைத்த பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து, தனித்தனிய்யே வெறுமனே வறுத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சை ஆகியவற்றை வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையும் அவ்வாறே பொடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய், நெய் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். தேவையான அளவு லட்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர், லட்டு போல் உருண்டையாக பிடித்துக் கொள்ளுங்கள்.
சுவையான அவல் லட்டு தயார்.

No comments: