Followers

Thursday, January 29, 2009

சாம்பார் பாத்

உடைத்த கோதுமை 500 கிராம்
துவரம் பருப்பு 250 கிராம்
பல காய்கறி (முருங்கை, கத்தரி, கீரைத்தண்டு போன்றவை) 500 கிராம்
சாம்பார் வெங்காயம் 500 கிராம்
கறிவேப்பிலை, சிறிது
கொத்தமல்லி சிறிது
மிளகாய் வற்றல் 6-8
கடலைப்பருப்பு இரண்டு சிறிய ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
கடுகு ஓரு சிறிய ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
புளி 25 கிராம்
எண்ணெய் ஒரு சிறிய ஸ்பூன்



உடைத்த கோதுமை இரு மடங்கு தண்ணீருடன் வேகவைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்துக் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை வேக வைக்கவும். பருப்பு முக்கால் வாசி வெந்தவுடன் உரித்த வெங்காயம், நறுக்கிய காய்கறி, அரைத்த மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும். காய் வெந்தவுடன், புளிக் கரைசலை ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்த கோதுமையைக் கலந்து, கடுகு தாளித்து விடவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

No comments: