Followers

Friday, January 30, 2009

வெங்காய ரொட்டி

கோதுமை மாவு 350 கிராம்
வெங்காயம் 3 பெரியது
பச்சை மிளகாய் 6
கொத்தமல்லிக்கீரை கால் கட்டு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் ஒரு பெரிய ஸ்பூன்


கோதுமை மாவு, உப்பு, இரண்டையும் சேர்த்து சலிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு கலந்து பின்னர் தேவையான அளவு மிதமான சூடுள்ள தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பிசைந்த மாவை இருபது நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். பின்னர் சிறு உருண்டைகளாக வகுத்து சப்பாத்தி போல் திரட்டி சூடான தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும்.
சுவையான வெங்காய ரொட்டி ரெடி

No comments: