Followers

Tuesday, December 25, 2012

மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர்ந்தால் தான் ஆபத்து மறையும்.

விஞ்ஞானத்தால் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் ஆபத்தும் வளர்ந்து கொண்டே போகிறது. மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர்ந்தால் தான் இந்த ஆபத்து மறையும்.

செய்யும் செயலை பற்றின்றிச் செய்தால் ஒழுக்கம் வளரும். உள்ளமும் தூய்மை பெறும். பற்றின்றிச் செய்ய பகவானின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அந்த அளவு சிக்கனம், எளிமையைப் பின்பற்ற வேண்டும். அதில் மிச்சப்படும் பணத்தை தர்மத்திற்காகச் செலவழிக்க வேண்டும்.

மக்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி, அந்த இடத்தில் இருந்தே அவர்களை முன்னுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தான் தலைவர்களின் கடமை.

வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால் அதன் பின் நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் அந்த ஒழுக்கத்தின் அழகைக் காண முடியும். 

காஞ்சிப்பெரியவர்

No comments: