Followers

Wednesday, February 3, 2016

நமஹ" என்ற சொல்லுக்கு அர்த்தம்:-


கோயிலில் மந்திரம் சொல்லும் போது, "நமஹ' என்ற சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
இதன் அர்த்தம் என்ன?
சமஸ்கிருதத்தில் "மமஹ' என்றால் "என்னுடையது' என்று பொருள்.
அதோடு "ந' என்பதைச் சேர்த்து "ந மமஹ' என்று சொன்னால் "என்னுடையது இல்லை' என்று அர்த்தம் உண்டாகும்.
"ந மமஹ' என்பதே "நமஹ' என்றானதாகச் சொல்வர்.
"எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது' என்று அறிவிப்பதற்காகவே அர்ச்சனையின் போது "நமஹ' என்று உச்சரிக்கின்றனர்.
கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய், பழம் மட்டுமில்லாமல், வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே "நமஹ' என்கின்றனர்.
ஸ்ரீ கோவிந்தாய நம:

No comments: