Followers

Tuesday, March 3, 2020

அன்புக் குழந்தையே...


யார் உனக்கு துன்பத்தைக்கொடுத்தாரோ, அவர் இன்றைக்கு நிச்சயம் நன்றாக இருப்பதை போன்ற தோற்றம் உனக்குத் தெரியும்..
கெட்டதைச் செய்கிற அனைவரும் நன்றாக இருக்கிறார்கள், நல்லதையே செய்கிற நான் கஷ்டபடுகிறேனே என கவலை படாதே.
அவர்கள் காலையில் பூத்து மாலையில் வாடும் பூவை போன்றவர்கள், இப்போது உள்ள மேன்மையிலிருந்து விரைந்து கீழே தள்ளப் படுவார்கள்.
ஆனால் நீயோ விருட்சத்தை போன்றவர். நீ ஆழ வேரூன்றி நிற்பாய். அநேகம் பேர் உன்னை ஏமாற்ற வந்தாலும் அயர்ந்து போகாதே.
எத்தனை இழப்புகள் வந்தாலும் சோர்ந்து போகாதே. நான் ஆழமாக வேர் விட்டிருக்கும் விருட்சம் என்று சொல்லிக் கொள்,
நீ மலர்கள் மட்டுமல்ல கனிகளையும் தருவாய், அதன்மூலம் வருகிற நன்மை பலருக்கும் பயனாக இருக்கும்.
நாம் இன்று கஷ்டப்படுவதைப் போலத்தான் நம் எதிரில் இருப்பவரும் ஒருநாள் துன்பத்தை அனுபவிக்கப் போகிறார் என்பது உனக்கு தெரிந்துவிட்டால்,
நிச்சயமாக அவர்கள் மீது கோபப்பட மாட்டாய், அவர்களுக்காக நிச்சயம் பரிதாபப்படுவாய்.
இன்று நான், நாளை நீ என்று சொல்லிக் கொள்வாய்.
உனக்குத் தவறு இழைத்தவரை பார்க்கும் போது, இவரும் தண்டனைக்கு தயாராகிறார் என்பதை தெளிவாக தெரிந்து அவருக்காக பரிதாபப்படு.
எந்த சூழ்நிலையிலும் நீ பாதிக்கப்படமாட்டாய். ஏனெனில் உன் மனதை படிக்கிற நான் நிச்சயம் வெகுமதிகளை அள்ளித் தருவேன்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்...

No comments: