Followers

Monday, February 4, 2019

ஒருவனுக்கு காந்தியை பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேவை ஆதரிப்பவனாகதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒருவனுக்கு காந்தியை பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேவை ஆதரிப்பவனாகதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 
அவன்......
1. பகத்சிங்கை தூக்கிலிடுவதை எதிர்க்காமல் காந்தி கள்ள மெளனம் சாதித்ததை அறிந்தவனாக இருக்கலாம். (1/15)
2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம் (2/15)
3. அவரது வெள்ளையனே வெளியேறு போராட்டம் உட்பட அனைத்து ஒத்துழையாமை இயக்க போராட்டமும் தோல்வியில் முடிந்ததை அறிந்தவனாக இருக்கலாம் (3/15)
4. நவகாளி கொலைகளை காந்தி அணுகிய விதத்தை தெரிந்தவனாக இருக்கலாம் (4/15)
5. ஒரு முஸ்லிம் கொல்ல வந்தால் இந்துக்கள் மரணத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்ற காந்தியின் அஹிம்சை தத்துவத்தை அறிந்தவனாக இருக்கலாம். (5/15)
6. இஸ்லாமிய பிரிவினைவாதம் எனும் சிறு செடியை நீர் ஊற்றி மரமாக வளர்த்த கதையை தெரிந்தவனாக இருக்கலாம்.(6/15)
7. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்களை,சீக்கியர்களை பற்றி ஒரு நொடி கூட சிந்திக்காமல் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததனை அறிந்தவனாக இருக்கலாம் (7/15)
8. பிரிவினையின் போது கொல்லப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் இன்னமும் தனது காதால் கேட்பவனாக இருக்கலாம் (8/15)
9. சுதந்திரத்துக்கு காந்தி ஒரு காரணமே அல்ல ஆனால் பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்பதை தெரிந்தவனாக இருக்கலாம்.(9/15)
10. சர்தார் வல்லபாய் படேலுக்கு போக வேண்டிய பிரதமர் பதவியை தனது பிடிவாதத்தால் நேருவிற்கு கொடுத்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம் (10/15)
11. சுதந்திரத்துக்கு உண்மையான காரணமான நேதாஜியை நேசிப்பவனாக இருக்கலாம் (11/15)
12. வ.உ.சி செக்கிழுக்க, நேதாஜி தேடப்படும் குற்றவாளி ஆக என தனக்கு உடன்படாத பல தலைவர்களை ஆங்கிலேயனை கொண்டே அழித்த குயுக்தியாக இருக்கலாம் (12/15)
13. ஆங்கிலேயே ஆட்சியை நீக்கிவிட்டு கிறித்தவ மத அமைப்புகளின் மேலாதிக்கத்தை ஆதரித்ததாக இருக்கலாம். (13/15)
14. நிர்வாகத்துக்கு வெளியே இருந்துகொண்டு தன்னை முன்னிலைப்படுத்தும் நிர்வாக முறையை (தற்போதைய இங்கிலாந்து மன்னர் குடும்பம் போன்ற) உருவாக்க முயன்றதாக இருக்கலாம் (14/15)
15. தன்னைத்தவிர வேறு தலைவர்கள் உருவாகிவிடக்கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக செயல்பட்டதை அறிந்தவனாக இருக்கலாம் (15/15)
காந்தி மீதான மனக்கசப்புக்கு... கோட்சே ஆதரவு தன்மைதான் காரணம் என்பது... இந்திய சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்தது என்பதைவிட அபத்தமானது. (பாரதத்தையே பதம்பார்த்த ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள்.. ... என்ன... அமர்நாத் யாத்திரை போகும்போது... பனிச்சரிவு ஏற்பட்டு இறந்தவர்களா....!!!!????)
சிந்திக்க வேண்டிய விஷயம் -
1947-ல் தேசப்பிளவின் பொழுது -
20% முஸ்லிம்களுக்காக 21% நிலப்பரப்பு கொடுக்கப்பட்டும் -
அவர்களில் 40% முஸ்லிம்கள் இங்கேயே தங்க அனுமதித்தது,
ஹிந்துஸ்தான், பாகிஸ்தான் -
என்று மதங்களின் அடிப்படையில் இரண்டு நாடுகளாகியிருக்க வேண்டியது -
இந்தியா என்ற மதசார்பற்ற நாடும் -
பாக்கிஸ்தான் என்ற மதவாத நாடாகவும் ஆனது 
லட்சக்கணக்கான மக்கள் செத்தது -
இவை எல்லோருக்கும் தெரியும் -
ஆனால்,
அந்த 1947-ல் வெறும் நாடுகள் மட்டும் பிரிக்கப்படவில்லை.
அசையாச் சொத்துக்களைத் தவிர -
அசையும் சொத்துக்கள்
வண்டி வாகனங்கள்,
ஆடுகள், மாடுகள் -
டைப்ரைட்டர்கள், மேஜைகள் -
பேனாக்கள், ஏன் குண்டூசிகள் முதற்கொண்டு பிரிக்கப்பட்டன என்பது நம்மில் எத்துனை பேருக்குத் தெரியும் -
அவற்றையெல்லாம் விட -
மொஹஞ்சதரோவில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் பிரிக்கப்பட்டன -
அதில் ஒரு அழகிய ஆபரணம் -
இரண்டாக வெட்டப்பட்டு பிரிக்கப்பட்டது என்பதாவது யாருக்கும் தெரியுமா?
இவ்வளவு கறாராக பாக்கிஸ்தானுக்கு பங்கு கொடுத்த -
தாத்தாவும், மாமாவும் -
நியாயமாக இங்கிருந்த இஸ்லாமியர்களையும் அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்து -
நம் நாட்டை ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் -
அவர்களை இங்கே தங்க வைத்து -
சலுகைகளை அள்ளி வீசி -  ............................................................................... Hm

No comments: