Followers

Thursday, July 25, 2019

ஜெய் ஸ்ரீராம்!


இங்கு சில தமிழ் விரோதிகள் பரப்பிவிடும் பொய 'ராமர் வந்தேறி வடநாட்டு ஆர்ய தெய்வம்' தமிழ் அறிந்த யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்!
தமிழின் முதல் நூல் #தொல்காப்பியம் தமிழர் தெய்வங்களின் வரிசையில் முதலில் வைத்தது மாயோனைத் தான்! அந்த மாயோனின் அவதாரம் தான் ராமன் என்கின்றது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான #மணிமேகலை! ராமன் புகழைக் கேட்காத காது காதே இல்லை என்கின்றது #சிலப்பதிகாரம்! ஏழு மரங்களை ஒரே அம்பில் சாய்த்த ராமனது தோள் வலிமையைப் புகழ்கிறது #சீவகசிந்தாமணி
தமிழின் பழமையான சங்க இலக்கியங்களான #புறநானூறு#அகநானூற்றிலேயே ராமரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன!
பக்தி இலக்கியங்களில் ராமபிரானைப் பாடாத #ஆழ்வார்களே இல்லை! #சைவசமயக் குரவர்கள் கூட தங்கள் பதிகங்களில் ராமரைப் போற்றிப் பாடியுள்ளனர்!
இவ்வளவு ஏன் தமிழின் ஆகப் பெரிய இலக்கியமே '#கம்பராமாயணம்' தானே? அதுவே ராமபிரானைப் பரம்பொருளாகத் தானே காட்டுகின்றது?
#சோழர்கள் தங்களை பல்வேறு கல்வெட்டுகளில் ஸ்ரீ ராமன் வழிவந்தவர்கள் என்று தானே கூறியுள்ளார்கள்?
தமிழர் ஆண்டதாக பெருமை பேசப்படும் #தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ள ஒரே காவியம் #ராமாயணம் தானே?
உண்மை இப்படி இருக்க, தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட ராமபிரானை தமிழர் வரலாறும், இலக்கியமும் அறியாத மூடர்கள் அந்நியப்படுத்த நினைப்பது அவர்தம் அறியாமையே ஆகும்! ராமன் அகண்ட பாரதத்தையே இணைப்பவன் என்பதால் அவன் பெயரே பிரிவினைவாதிகளை நடுங்க வைக்கின்றது!
அவர்கள் நடுங்குமளவு சத்தமாகச் சொல்லுவோம்!
ஜெய் ஸ்ரீராம்
!

No comments: