Followers

Saturday, November 30, 2019

உலக அதிசயங்கள் 7


ஒரு வகுப்பில் ஆசிரியர் பிள்ளைகளை உலகின் சிறந்த ஏழு அதிசயங்களைப் பட்டியலிடச் சொன்னார்.
பிள்ளைகள் அனைவரும் எழுதிக் கொடுத்துவிட்டனர். அவர்களின் கணிப்புப் படி கீழ்க்கண்டவை உலக அதிசயங்கள் வரிசைப் படி.
1.எகிப்தியப் பிரமிடுகள்.
2.தாஜ்மஹால்
3.கிரேண்ட் கேன்யான் (Grand Canyon )
4.பனாமா கால்வாய்
5.எம்ப்பையர் ஸ்டேட் கட்டிடம். (Empire State Building )
6. செயின்ட் பீட்டர் பேஸிலிக்கா (வாடிகன்)
7. சீனப் பெருஞ்சுவர்
ஒரே ஒரு குழந்தை மட்டும் இன்னும் முடிக்கவில்லை;யோசித்து யோசித்து எழுதிக் கொண்டிருந்தாள். ஆசிரியர் அருகில் சென்றார்
" சாரு! என்ன ஆயிற்று ஏன் இன்னும் முடிக்கவில்லை?
"என்ன சார் செய்வேன்? ஆனடவனின் படைப்பில் அதிசயங்களுக்குப் பஞ்சமேயில்லை. அவற்றில் எனக்கு அதிசயமாகத் தோன்றியவை களைப் பட்டியலிட்டு விட்டேன். சரிதானா எனப் பார்த்துச் சொல்லுங்கள்." என்றாள்.
ஆசிரியர் சாருவின் பட்டியலை வாசித்தார்.
சாருவின் பட்டியல் இதோ:
என்னைப் பொருத்தவரை இந்த ஏழும்தான் கடவுளின் படைப்பில் அதிசயங்களாகக் கருதுகிறேன்.
1. பார்க்க முடிவது (ஒருநாளைக்குக் கண்களில் கர்சீஃபைக் கட்டிக்கொண்டிருந்து பாருங்கள்) 💐
2.கேட்க முடிவது (ஒருநாளைக்குக் காதில் பஞ்சு வைத்துப் பாருங்கள்)🎂
3.தொட்டு உணர முடிவது ( கற்பனை செய்து பாருங்கள் உங்கள் 6 மாதக் குழந்தை உங்களைத் தொடுவதை உணரமுடியாவிட்டால் எப்படியிருக்கும் என்று) 👌
4.சுவையை உணர முடிவது ( பிரியாணிக்கும் கம்மங்கூழுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தால் எப்படியிருக்கும்) 👍
5.சிந்திக்க முடிவது (இதை விடாய் பெரிய தணடனை இருக்கமுடியுமா?)👋
6.சிரிக்க முடிவது (எவ்வளவு சந்தோஷப்பட்டாலும் மிருகங்களால் சிரிக்க முடிவதில்லை. சிரிப்பு எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் மனிதனுக்கு? 👏
7.அன்பு செலுத்துவது( ஒரு நாய்க்குட்டி வளர்த்துப்பாருங்கள் அன்புக்கு அர்த்தம் தெரியும்)🎁
வகுப்பில் ஒரே அமைதி (pin-drop silence). ஆசிரியர் மெதுவாகக் கைதட்டினார். புரிந்ததும் எல்லாக் குழந்தைகளும் ஒவ்வொருவராகக் கை தட்ட ஆரம்பித்தன.
வகுப்பே கைதட்டிப் பாராட்டியது சாருவை.
எல்லோரும் யோசிப்பது போலவே
யோசிக்க வேண்டுமா என்ன? மாற்றி யோசியுங்கள். புதுப் புது
விஷயங்கள்புரியும். புதுப் புது அர்த்தங்கள் தோன்றும்

No comments: