Followers

Wednesday, November 20, 2019

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்



ஏரிக்கரை அருகே ஒரு சிறுவன் விளையாடிக்  கொண்டிருக்கிறான். அப்போது, " ஐயோ!
காப்பாற்று; காப்பாற்று " என ஓர் குரல்.  ஆற்றோரத்தில் வலைக்குள் சிக்கிய குரல் அது.
"
உன்னை வலையிலிருந்து. விடுவித்தால், நீ என்னை விழுங்கி விடுவாய் " ....சிறுவன்.
"
நான் உன்னை சத்தியமாக சாப்பிட மாட்டேன்.  என்னைக் காப்பாற்று " ...என்றது முதலை.
சத்திய வார்த்தையை நம்பி விடுவித்த சிறுவனை, முதலை கவ்விக்.கொண்டு விழுங்க
ஆரம்பித்தது. " இது நியாயமா? " என சிறுவன் கேட்க. " இது தான் உலகம்! இது தான்
வாழ்க்கை ! " என்றது முதலை.
அருகில் இருந்த மரத்தில் இருந்த பறவைகளைப் பார்த்து, முதலைக் கூறின
வார்த்தை சரிதானா எனக் கேட்டது. " நாங்கள் மர உச்சியில். முட்டைகள் இட்டாலும். பாம்பு வந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றன . அதனால்  சொல்கிறேன் முதலை சொன்னது சரியென்று".
அருகில் நின்றிருந்த கழுதையிடம் கேட்டான்.  அதுவும் முதலை சொன்னது சரி என்றது.
கடைசியாக ஓடிக் கொண்டிருந்த முயலிடம் கேட்டது. அது, " முதலை சொன்னது சரியல்ல "
என்றது. முதலை கோபத்துடன் வாதாடத்  துவங்கியது. சிறுவனை வாயில் கவ்வியபடி
பேசுவதால் காதில் விழவில்வை என்றது முயல். சிறுவனை விடுவித்து முதலை பேசத்
தொடங்கியது.. சிறுவன் தப்பி ஓடினான்.  முயல் முதலையைப் பார்த்துக் கூறியது: "இது
தான் உலகம். இதுதான் வாழ்க்கை. "
சிறிது நேரம் கழித்து. சிறுவன் கிராம மக்களை  அழைத்து வர, அவர்கள் முதலையைக் கொன்று
விட்டனர். சிறுவன், " இது தான் வாழ்க்கைஇது தான் உலகம்! " என எண்ணியபடி பெரு
மூச்சு விடுகிறான்.
.......சுவாமி சுகபோதானந்தா.
இந்த நாள் இனிதாக வாழ்க வளமுடன்!!!


No comments: