Followers

Wednesday, May 6, 2020

வெயில் காலங்களில் AC உபயோகிக்கும் முறை!

இன்று காலை ஒரு பேங்க் எடிஎம் முக்கு பணம் எடுக்க உள்ளே சென்ற போது ஏசி 19 ல் செட் செய்து வைத்திருந்தார்கள். வெளியில் இருந்த வெயிலுக்கும் உள்ளே இருந்த கூலிங்கிற்கும் சம்பந்தமே இல்லை.

நான் பேங்க் மேனேஜரைச் சந்தித்து ஏசியை 24லில் செட் செய்யும்படி கூறினேன். அவர் யாருக்கோ போன் செய்து விசாரித்து விட்டு நீங்கள் கூறியது சரி உடனடியாக சரி செய்கிறேன் என்றார்.

இந்த வெயில் காலத்தில வெளியே பயங்கர சூடா இருக்குன்னு சிலர் (நிறைய பேர்ன்னும் சொல்லலாம்) அவங்க அவங்க வீட்டிலோ அலுவலகத்திலோ A/C யை 20 இன்னும் சிலர் 19,18 இல் எல்லாம் வைக்கிறார்கள் நல்லா சில்லுன்னு ஆயிடும்னு.

அது தவறு வெளியே 38-க்கு மேல குறைஞ்சது வெப்ப நிலை இருக்கும் போது எப்படி ஒரு கம்ப்ரெஸ்சர் 18,19 க்கெல்லாம் ரூம் டெம்பெரேச்சரைக் கொண்டு வர முடியும்?

வெளியே இருக்கும் வெப்பத்தை விட வித்தியாசம் கம்மியா இருந்தாத் தான்
A/C சரியா வேலை செய்யும் இல்லைன்னா compressor சீக்கிரம் அவுட் ஆயிடும்.

அதனாலே வெளியே இருக்கும் டெம்பெரேச்சருக்கும் ரூம் டெம்பரேச்சருக்கும் உள்ள வித்தியாசத்தை குறைச்சுக்கோங்க. அப்பத் தான் A/C நல்லா வேலை செய்யும் ரூமும் வெப்பம் இல்லாமல் இருக்கும்.

பகலில் வெப்ப நிலை ஏசியில் 25-27 இல் செட் பண்ணுங்க இரவில் 23-25 இல் செட் பண்ணுங்க இந்த ஏப்ரல் மே மாத காலங்களில் அதுதான் சரியானது.

ஏ.சி, ஏர்கூலர் ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்!

பகல் முழுக்க கொளுத்தும் வெயில்... இரவில் அது கிளப்பிவிட்ட அனல். ஏர்கண்டிஷனர் அல்லது ஏர்கூலர் இல்லாமல் பெரியவர்களாலேயே தூங்க முடிவதில்லை. குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம்?

ஆனால், குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்க வைக்கும் போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்

இதோ, அதற்கான உஷார் டிப்ஸை தருகிறார்கள் குழந்தை நல மருத்துவர்.

ஏ.சி. காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாகப் படுவது போல, படுக்க வைக்காதீர்கள்.
ஏ.சி. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள்.
பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கும் நாமும் தூங்கி விடுவதால், பிள்ளைகள் மூச்சுவிடச் சிரமப்படுவது தெரியாமலே போய் விடலாம்.

ஏ.சி.யில் இருக்கும் பில்டரில் சேரும் தூசியை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
இல்லையென்றால், அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக் குழாய்க்குள் சென்று விடும்.

இந்தத் தூசியை வெளியேற்றுவதற்காக, நுரையீரலானது சளியை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

குழந்தைகளுக்கு உடல் டெம்பரேச்சர் மாறுவது பற்றிச் சொல்லத் தெரியாது. எனவே, சூடான டெம்பரச்சரிலிருந்து சட்டென ஏசி அறைக்குள் அழைத்துச் செல்லாதீர்கள். அல்லது, அறைக்குள் நுழைந்ததுமே 16, 17 எனக் குறைந்த டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைக்காதீர்கள்.

இரவில் காற்று அனலாக இருப்பதால், ஏ.சி. அறைக்குள் நுழைந்ததுமே சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் தூங்க குழந்தைகள் ஆசைப்படுவார்கள். அதை அனுமதிக்காதீர்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளையாக இருந்தால், நெஞ்சுப் பகுதியையும், மூன்று வயதுக்குள்ளான குழந்தை என்றால், நெஞ்சுப் பகுதியோடு பாதத்தையும் துணியால் மறைத்துத் தூங்க வையுங்கள்.

ஏ.சி. காற்று சருமத்தை வறண்டு போகச் செய்யும். அதுவே, குழந்தைகளுக்குக் கண்களையும் உலர்ந்துப் போகச் செய்யும்.

No comments: