Followers

Saturday, May 2, 2020

professional ice breaking @ quarantine period

ஜார்க்கன்ட் உயர்நீதிமன்றம், Mahadeo construction co Vs. Union of India
 W.P.(T) No. 3517 of 2019 என்ற வழக்கில் 21-04-2020 அன்று வழங்கிய தீர்ப்பின் பின்னணி யில் சில விபரங்களை பகிர்வது இந்த பதிவின் நோக்கம்.

நமது வழக்கமான கருதுகோளாகிய, ஒரு வணிகர் ரிட்டன் தாக்கல் தாமதமாகும் நேர்வில் செலுத்த வேண்டிய வரிக்குரிய interest levy and demand என்பது உடன்நிகழ்வானது (interest levy u/s. 50(1) of GST Act is automatic) என்பதை இந்த தீர்ப்பு வெகுவான மாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

வழக்கின் அடிப்படை விபரங்கள்

வணிகர் பிப்ருவரி மார்ச் 2018 காலத்திற்குரிய GSTR 3B ரிட்டன்களை தாமதமாக தாக்கல் செய்து வரி செலுத்தியுள்ளார்.

Proper officer - Central GST Superintendent மேற்படி காலத்திற்குரிய  வரிக்கான தாமத வட்டித்தொகை u/s 50(1) ரூ.19,59,721- செலுத்திட வலியுறுத்தி intimation letter அனுப்பியுள்ளார். தொடர்ந்து Sec 79-ன் படி  Recovery action - Garnishee order by bank attachment 22-05-2019 அன்று மேற்கொண்டுள்ளார்.

இதனை எதிர்த்து இந்த வழக்கை assessee தாக்கல் செய்து முதலில்    stay பெற்றார். பிறகு 21-04-2020 நாளிட்ட உயர்நீதிமன்ற பென்ச் த Proper officer's order not sustainable என தீர்ப்பளித்துள்ளதால் இது கவனம் ஈர்க்கின்றது.

அவரது தரப்பு விவரங்களின் படி தொடர்புடைய காலத்திற்கான ரிட்டன் தாக்கலுக்கான கடைசி நாள் என GST N தெரிவித்த 31-03-2019க்கு முன்பே தம்மால் ரிட்டன் தாக்கல் செய்து உரிய வரி செலுத்தப்பட்டது.

GST Notification no. 76/2018 Central - Dated 31-12-2018  ன்படி ஜூலை 2017 முதல் செப்டம்பர் 2018 வரையான காலத்திற்கு அரசு சலுகை அளித்தது

Sec. 73 ன்படி adjudication மேற்கொள்ளப்படவில்லை. 
So,  interest levy and attachment is incorrect என்றவாறு வாதமிடப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தில், 
Sec 39(1), sec.50(1) ஆகியவற்றின் விபரங்களை கூறி   adjudication proceedings not necessary to interest levy and collection which is automatic என்றவாறு வாதிடப்பட்டது. 

உச்சநீதிமன்றத்தின் முன்தீர்ப்புகளான U.P. co-op cane union case decision reported in  2004 (5) SCC 472 and commissioner of central excise Vs. International Auto Ltd case decision reported in SCC 672 ஆகியவற்றின்படி அலுவலரது ஆணைகள் நியாயமானதே
மேலும் 31-12-2018 நாளிட்ட notification படி late fee மட்டுமே நீக்கப்பட்டது
 என வாதிடப்பட்டது.

இவற்றை பரிசீலித்த உயர்நீதிமன்றம் எவ்வாறாயினும் interest தொகை கணக்கிட்டு வணிகருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது விளக்கம் பெறாமல் இருப்பதாலும் உரிய ஆணை பிறப்பிக்காது interest demand-க்கு Recovery action - Garnishee order by bank attachment செய்த்தை தள்ளுபடி செய்து வழக்கை ஏற்பு செய்துள்ளது. இவ்வழக்கில், Godavari commodities Ltd Vs. Union of India என்ற வழக்கின் முடிவு முன்தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மேல்முறையீடுகளுக்கு உட்பட்டு, தற்போது, interest levy and demand without adjudication proceedings is not sustainable என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

No comments: