Followers

Friday, July 10, 2020

வட கொரியா பற்றி சில சுவாரசியமான தகவல்கள் எவை?


              பார்ப்பதற்கு குழந்தை போல இருப்பவர் தான் கிம் ஜாங் உன். ஆனால் இவர் செய்யும் செயல்களோ கொடூரமானவை.  2011 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி தலைநகர் பியாங்யாங் முழுவதும் மக்கள் அழுகையும், கண்ணீருமாக இருந்தனர். 1994 முதல் 2011 வரை வடகொரிய அதிபராக இருந்த கிம் ஜாங் இல் -ன் இறுதி ஊர்வலத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு காரைப் பின்தொடர்ந்தார் அதிபருடைய இளைய மகனான கிம் ஜாங் உன். அப்போது அவருடைய வயது 26. இதுவரை யாருமே பார்த்திடாத மனம் கொண்ட உன்-ஐ அப்பொழுது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

              வடகொரிய அதிபர் குடும்பத்தில் ஒரு பழக்கம் இருந்தது. சிறுவயதிலேயே பிறர் அறிந்திரா வண்ணம் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிடுவர். அப்படித் தான் வடகொரிய தூதுவருடைய குழந்தை என்ற போர்வையில் படிப்பு முடியும் வரை சுவிட்சர்லாந்தில் வளர்ந்தார் கிம் ஜாங் உன். இப்படி தலைமறைவாக இருந்தவர் தன் தந்தை இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு தான் வடகொரியாவுக்கு வந்தார்.

           பதவிக்கு வந்த பின் கிம் ஜாங் உன் போக்குவரத்து, கட்டுமானம், இலவச கல்வி வழங்கப்படும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், நாட்டில் இனி ஏழைகள் என யாருமே கிடையாது, கனரகத் தொழிலில் தாராளமய கொள்கைகள் பின்பற்றப்படும் என்றெல்லாம் அறிவித்தார். மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுவரை ஒரு பயங்கரமான ஆட்சியாளரிடம் அகப்பட்டிருந்த மக்கள் இவரின் அறிவிப்புக்கு பிறகு கீழ்கண்ட மனநிலையில் இருந்தனர்.

         பிறகு தானே தெரிந்தது இவர் "அதுக்கும் மேல" என்று. அவர் அறிவித்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவே இல்லை. ஆனாலும் அவர் வழக்கம்போல அறிவிப்புகள் வெளியிட்டுகொண்டே இருந்தார். பிறகு மக்கள், அவர் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் கீழ்கண்ட மனநிலைக்கு மாறிவிட்டனர்.

       அவர் எதுவுமே செய்யவில்லையா? செய்தார். என்ன செய்தார் என்றால்:  வடகொரியாவின் இரகசியங்களை மற்ற நாடுகளுக்கு கசியவிடாமல் செய்தார். வெளிநாட்டுப் புத்தகங்களைத் தடை செய்தார்.வெளிநாட்டு படங்கள், இசைகள், ரேடியோ முதலியவற்றை தடை செய்தார்.மிகக் கடுமையான தணிக்கைகளுக்குப் பிறகே வெளிநாட்டு நிகழ்ச்சிகளை வெளியிடும்படி செய்தார்.

          வடகொரியாவுக்கும் வெளி உலகுக்கும் இடையே பிரம்மாண்ட தொழில்நுட்ப சுவரை கட்டும்படி செய்தார். இவருடைய தந்தை தனக்காக அந்தப்புரம் ஒன்றைக் கட்டியிருந்தார். அதில் அவருக்கு சேவை செய்பவர்கள் பள்ளி மாணவிகள். இவர் தந்தை கூட பரவாயில்லை. நம்முடைய 'உன்'னிற்கு  17 அரண்மனைகள் இருப்பதாக செய்தி. அப்படி என்றால் நிலைமை இன்னும் மிக மோசம்தான். கிம் ஜாங் உன் மிகச் சிறந்த 'குடி'மகன். இவருக்காக மட்டுமே ஆண்டிற்கு 30 மில்லியன் டாலர் அளவிற்கு வெளிநாட்டில் இருந்து மது இறக்குமதி செய்யப்படுகிறது.

     ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பிரத்யேக மதுவை இறக்குமதி செய்ய தனித்தனியான அதிகாரிகள் இருக்கிறார்கள். மதுவகைகளைப் போலவே அசைவ உணவுகளிலும் அதிக ஆர்வம் உடையவர். வெண்பன்றி, ஒட்டகம், மான், மாடு என காட்டில் இருக்கும் அனைத்துமே இவர் உணவுப் பட்டியலில் இருக்கும். ஒவ்வொரு இறைச்சியும் ஒவ்வொரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். உதாரணமாக வெண்பன்றி-டென்மார்க், ஒட்டகம்-ஈரான். இதனால் தற்போது இவரது எடை 120 கிலோ(+). இதில் புகைப் பழக்கம் வேறு இருப்பதாக தகவல். Yves Saint Laurent என்ற சிகரெட் தான் இவருக்கு மிக விருப்பமானது. [ Yves சிகரெட் ஒரு பாக்கெட் விலை ஏறத்தாழ 55 டாலர்கள் மட்டுமே அதாவது இந்திய மதிப்பில் 4100 (+) ] அதிபருக்கு விமான பயணம் என்றால் அலர்ஜியோ அலர்ஜி. சீன அதிபர் உடனான சந்திப்பின் போது கூட இரயில் பயணம் தான் மேற்கொண்டார்.

          நாட்டின் உட்கட்டமைப்பில் பல குறைகள் இருப்பினும் ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை ஆகியவற்றை மேற்கொண்டு அமெரிக்காவையும், மற்ற உலக நாடுகளையும் வெறுப்பேற்ற தவறுவதே இல்லை. இப்படி தான் ஒருமுறை வடகொரியாவில் இராணுவப் புரட்சி செய்ய முயன்ற இராணுவ ஜெனரலை கொடூரமாக கொலை செய்து தன் வீட்டில் இருக்கும் பிரம்மாண்ட பிரானா மீன் தொட்டியில் வீசி விட்டார். இப்படி மர்ம தேசத்தின் மன்னாதி மன்னனாக வலம் வரும் கிம் ஜாங் உன்-ஐப் பற்றி முழுமையாக அறிய அவரிடமே நேரடியாக சென்றுதான் கேட்கவேண்டும்.

No comments: