Followers

Friday, July 10, 2020

மகாபாரத்தின் வில்லன் துரியோதனன் இல்லை.

மகாபாரதத்தில் கர்ணன் செய்த தவறுகள் என்னென்ன?

துரியோதனிடம் பல நற்குணங்கள் இருந்தன. ஆனால் அவனுடைய சேர்க்கை அவனை அகல பாதாளத்தில் கொண்டு நிறுத்தியது. கர்ணன், சகுனி போன்றவர்களின் துர்போதனையினால் துரியோதன் தோற்று உயிரிழந்தான்.

கர்ணன் சாதாரண குடும்பத்தில் பிறந்து துரியோதன் உதவியால் அங்க நாட்டு ராஜா ஆனான். துரியோதனின் மிக நெருங்கிய நண்பன் அவன். பல வகை அனுபவங்களும் பெற்றவன். ஒரு உண்மையான நண்பன் தக்க சமயத்தில் சிறந்த ஆலோசனை புரிந்து தவறான பாதையில் இருந்து நற்பாதைக்கு இழுக்க வேண்டும். இதை கர்ணன் செய்தானா?

1. துரியோதனன் பாண்டவர்களை அரக்கு மாளிகைக்கு அழைத்து கொடூரமாக தீயிலட முயன்றான். கர்ணன் தடுத்தானா? மாறாக இதற்கு துணை போனான்.

2. சகுனி ஏற்றப்பட்ட பகடை கொண்டு தர்மரை வென்றான். கர்ணன் தடுத்தானா? மாறாக இதற்கு துணை போனான்.

3. பாஞ்சாலி மானம் காக்க முயன்றபோது கர்ணன் காத்தானா? மாறாக பழைய கோவம் கொண்டும் அவளை அவமானப்படுத்தினான். ஒரு சிறு பெண் பல நாள் முன்னர் கிண்டல் செய்தற்காக அவளை அவமானம் படுத்துவதா தர்மம். இதுவா ஒரு ராஜாவிற்கு அழகு? இப்படி ஒரு பெண்ணிற்கு பங்கம் விளைக்கும் இவனா பெரிய மனிதன்?

4. பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் முடிந்து வரும்போது பரமாத்மா கிருஷ்ணன் தூது வந்து வெறும் 5 கிராமம் கேட்டான். பெரியவர்கள் எல்லாம் இதனை எடுக்க அறிவுரை செய்த பொழுது, கர்ணன் போரிற்காக கர்ஜித்தான். தேவையில்லாத போர் மூண்டு கவுரவர்கள் பூண்டோடு அழிந்தனர்.

5. பாண்டவர்களுக்கு பரமாத்மாவே துணை புரிந்தார். இது எல்லா பெரியவர்களும் தெரியும். ஆனால் கர்ணன் இது தெரியாமல், துரியோதனனுக்கு அதி நம்பிக்கை கொடுத்தான். பாண்டவர்களின் வலிமையை துச்சமாக நினைத்து குறைத்து மதிப்பிட்டான். இந்த ஆணவம் தோல்விக்கு பாதை வகித்தது.

கர்ணன் ஒரு நண்பனாகவும் இல்லை. ஒரு விவேகமுள்ள ராஜாவாகவும் இல்லை. இதற்கு நேர் மாறாக கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு நற்போதை செய்து, சரியனான நம்பிக்கை ஊட்டினான். தர்மரும் பல விவேகம் மிக்க பெரியோர் ஆலோசனை கேட்டார். இதனால் தான் எல்லா பெரியோர்க்கும் தர்மரே பிடிக்கும். நற்சேர்க்கை உயிர் காக்கும்.

துர்சேர்க்கை உயிர் கெடுக்கும். இது மஹாபாரத்தின் பல தத்துவங்களில் ஒன்றாகும்.

No comments: