Followers

Friday, July 10, 2020

கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள்:


கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன. கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர்.

கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.

கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும். கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான விட்டமின் E இதில் நிறைவாக உள்ளது. செரிமானத்திற்க்கு உதவும் என்சைம்கள் (Enzymes) சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி இலை தூண்டுகிறது. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லி இலையைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்

No comments: