Followers

Saturday, April 26, 2008

சத்ய வார்த்தை




ஒழுக்கமே வாழ்க்கையில் உயர்வு தரும் குணம். மக்கள் அனைவரும் ஒழுக்கமாக வாழ கற்றுக்கொண்டால்,உலகமே அமைதியின் வடிவமாக மாறிவிடும்.



தவறு செய்பவர்கள், அதனை பிறர் சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்ளவேன்டும். அதை விடுத்து அதை நியாயப்படுத்தியும், பிறர் சொல்லித்தான் திருந்துவதா என்று எண்ணுவதும் கூடாது.



பிறருக்கு உதவும் பெரியோர் தமக்கு என்று எதையும் வைத்துக்கொள்வதில்லை. இவர்களின் எண்ணம், சொல், செயல் எல்லாமே சிறப்பானதாகவே இருக்கும்.



விளக்கு உயரத்தில் இருந்தால், ஒளி அதிக தூரத்திற்கு பரவி வெளிச்சம் தெரியும். அதைப்போலவே உங்களது புகழ் பரவ வேண்டுமானால் எண்ணம், செயல்களால் உயர்ந்தவராக இருங்கள்.



சந்தன மரத்தில் செய்த சிமிழ் மணப்பதும், சந்தனம் வைத்த தகர டப்பா மணப்பதும் இயற்கை. அது போல நல்லவர்களின் சேர்க்கையால் தான் வாழ்க்கையும் சிறப்படையும்.



இளமைக் காலத்திலிருந்தே பற்றற்ற தன்மையை பழகிகொள்வது நல்லது. ஆரம்பத்தில் அது சிரமமாக இருந்தாலும் சிறுது சிறிதாக பழகி கொள்ள முயற்சிக்க வேண்டும்.



உங்கள் மனம் ஆறுதலை தேடும் சமயங்களில் எல்லாம் இறைவனின் இந்த திருநாமங்களை சொல்லி பழகுவது நல்லது.



எந்த ஒரு செயலை செய்தாலும் மற்றவருடைய நலனை கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள்.

No comments: