Followers

Friday, April 4, 2008

Puttaparthi III


பிரசாந்தி நிலையத்தில் தினந்தோறும் அதிகாலையிலேயெ பலவித ஆன்மீக நிகழ்ச்சிகள் துவங்க ஆரம்பித்து விடுகின்றன. பிரசாந்தி மந்திரில் தினந்தோறும் காலை 5 மணிக்கு ஓம்காரம் 21 முறை சொல்வதும், பகவான் பாபாவைத் துதி செய்து “சுப்ரபாதம்” சொல்வதும், பின் பூஜைஹாலைச் சுற்றி வேதகோசங்கள் ஒலிப்பதும், அவை முடிந்தபின் பிரசாந்தி நிலையத்தில் கிழக்கே அமைந்திருக்கும் பெரிய வினாயகர் கோவில் முன்பு மகிளாஸ் (பெண்கள்) நகர சங்கீர்தனமும் பின்பு ஆடவர் நகர சங்கீர்த்தனமும் பிரசாந்தி நிலய வளாகத்திற்குள் சுற்றி வந்து சுமார் 5 ¾ மணிக்கு நிறைவு செய்கிறார்கள். பின்பு மந்திர் முன்னால் அமைந்துள்ள குல்வந் ஹாலில் 6.30 மணிக்கு பகவான் பாபாவின் தரிசனமும், சுமார் 9.00 மணிக்கு பஜனும் மாலை 3 மணிக்கு மறுபடி பாபாவின் தரிசனமும் சுமார் 5 மணிக்கு பஜனும் எல்லோர் முன்னிலையிலும் தொடர்ந்து தினந்தோறும் நடை பெற்று வருகின்றன. யாவரையும் கவரும் “குல்வந் ஹால்” ஓர் அரன்மணை போல் காட்சி தருகிறது. ஹால் முழுவதும் பெரிய பெரிய சர விளக்குகள் அலங்கரிக்கின்றன. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஆண்களும் பெண்களும் தனித்தனியே அவ் ஹாலில் அமைதியுடன் கூடி தினந்தோறும் பகவான் பாபாவை தரிசித்தும், அவரிடம் கோரிக்கை லெட்டர்கள் கொடுத்தும், அவருடைய அருளுரைகள் கேட்டும் பயன் பெறுகின்றனர். பக்தர்கள் முன்னிலையில் பாபா ஒய்யார நடை நடந்தும், பிரேமை கலந்த கருணை பார்வையை காண்பித்தும் இனிய புன்முறுவல் செய்தும் சிற்சிலருடன் கனிவன மொழி பேசி தம் அன்பை வெளிப்படுத்துவதும் தம் தெய்வீக கரத்திலிருந்து விபூதி சிருஷ்டித்து சிற்சில பக்தர்களுக்கு வழங்குவதும் தம் “அபயஹஸ்தம்” காண்பித்து எல்லோரையும் ஆசிர்வதிப்பதும் சிற்சிலரை பாபாவே தேர்ந்தெடுத்து தம் தனி அறையில் நேர்முகப்பேட்டி கொடுப்பதும் ஆகிய இவற்றைப் பார்க்க நினைக்க எப்பொழுதும் பரவசம் ஏற்படும்.

No comments: