Followers

Tuesday, April 29, 2008

Puttaparththi 10


இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அண்மையில் அமரத்வம் அடைந்த நம் மதுரை மூத்த சாயி பக்தர் பகவான் பாபாவின் அணுக்கத் தொண்டரக விளங்கிய பி.எஸ்.ஏ. சுப்ரமனியம் செட்டியார் அவர்கள் பகவான் அருட்கடாட்சம் அன்பு அரவணைப்பின் மூலம் தம் மனோவலிமை விடாமுயற்சியினாலும், குறிப்பாக பக்தர்களின் பேரன்பினாலும் , பேருதவியினாலும் ,பெரும் ஒத்துழைப்பினாலும் பிரசாந்திநிலைய பூர்னசந்திர ஹாலின் (Poorna Chandra Hall) மேடையின் 2 பக்கங்களிலும் “ஓம் சிரடி சாயிராம்”, - “ஓம் பர்த்தி சாயி ராம்” ("Om Sri Siradi Sai Ram", - Om Sri Parthi Sai Ram )என பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பலகைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பதிக்கச் செய்தும் ,நம் பாரத நாட்டின் பற்பல பகுதிவாழ் மற்றும் பல வெளிநட்டு பக்தர்கள், (foreign devotees) சகோதர ,சகோதரிகளை கோடிகணக்கில் “ஓம் சாயி ராம்” எனும் நாம ஜெபங்களை எழுதச் செய்தும் ,அவ்வாறு எழுதப்பட்ட புத்தகங்களை சேகரித்து பிரசாந்தி மந்திரை (Pirasanthi Manthir)அலங்கரிக்கும் குல்வந் ஹாலின் முன்புறம் அமைந்துள்ள மேடையின் அஸ்திவாரத்தில் அவ் ஏடுகளை பதிக்கச் செய்தும் , அதன் மேடையின் மேல் ராமர், சீதை லட்சுமணர், விக்ரஹங்களை நோக்கி ஆஞ்ஜனேயர் “ ராம நாம பஜனை” செய்யும் காட்சியுடன் விக்ரகம் ஸ்தாபிக்க செய்தும் ,புகழ் பெற்ற சூபர் ஸ்பாலிடி மருத்துவ மனை (Super speciality Hospital) முகப்பில் வைத்தீஸ்வரராக விளங்கிய “தன்வந்தரி பகவான்” சிலையை அலங்கரிக்கச் செய்தும், பிரசாந்தி வினாயகர் கோவில் அருகில் திருமுருகன் கோயில் ,ஆஸ்ரமவளாகத்தின் ஓர் பகுதியில் வேத மாதா காயத்ரி அம்மன் கோவில் எழுப்பியும், பகவான் பாபாவின் முன்னிலையில் பாதுகை பிரதிஷ்டை பூஜைகளை பல ஊர்பக்தர்கள் சூழ கோலாகலமாய் நடத்தி தெய்வ பிரிதி செய்தும் ,அவற்றிற்கும் மேலாக இத்தரனி மக்கள் யாவரும் மகிழும் வண்ணம் கோடி ரூபாய் செலவில் தங்கத் தேர்(Goldan Car) ஒன்று கட்டி முடித்து பர்த்தியில் ஓர் பெரிய விழா அமைத்து பகவான் பாபாவிற்கு சமர்ப்பனம் செய்து கொடுத்தும் அவ்வழகிய தங்கத் தேரில்(Goldan Car) எல்லோரும் வியக்கும் வண்ணம் பகவான் பாபாவை எழுந்தருளச் செய்தும் ,நம் மாமதுரையில் டிரஸ்ட் மூலம் அழகியதோர் “ஆனந்த நிலயம்” அமையச் செய்ததும் ,ஆகிய அவரது ஆத்மார்த்தமான உன்னத சேவைகளை நினைத்து நெஞ்ஜம் மகிழ்ந்தும், இவ்விளக்க உரையை என்னையும் ஒரு கருவியாக்கி எழுதவைத்த பகவான் பாபாவின் மலரடி தொழுது சரண் புகுந்து நிறைவு செய்கிறேன்.



ஜெய் சாயி ராம்


R.N.Subramanian


Madurai.



1 comment:

Anonymous said...

மிக அருமையான பதிவு. பாபா பற்றிய தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.