Followers

Sunday, April 6, 2008

puttaparthi V


பிரசாந்தி நிலையத்தில் பகவான் பாபாவின் அனுக்கிரஹங்களுடன் நாமகரணம், காது குத்துதல், உபநயனம் ,திருமணம் ,சஸ்டியப்த பூர்த்தி, சதாபிசேகம் ஆகிய வைபவங்கள் நடைபெற்று வருகின்றன. பாபா அவர்கள் நடத்திவைக்கும் திருமண வைபவத்தில் தம் தெய்வீக கை அசைப்பின் மூலம் அப்போதே சிருஷ்டிக்கப்பட்ட மஞ்ஜள் கயிறு அல்லது திருமாங்கல்யம் (தங்க டாலர் வைத்து கருமணியுடன் கூடியது) வரவழைத்துக் கொடுத்து மணமக்களை ஆசீர்வதிப்பார். மேலும் கைநிறைய மங்கள அட்சதைகள் ஸிருஷ்டித்து மணமக்களையும் அங்கு இருப்போரையும் ஆசிர்வதிப்பது பார்க்க கண்கொள்ளக்காட்சியகும்.

மேலும் பிரசந்தி நிலயத்தில் பாபா அவர்களின் முன்நிலையில் ஆண்டு தோறும் பற்பல விழாக்கள் பக்தர்கள் முன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன அவையாவன :


ஜனவரி - ஆங்கில புத்தாண்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் விளையாட்டு விழா (SPORTS DAY), சங்கராந்தி (தைப்பொங்கல்)


பிப்ரவரி - மஹா சிவராத்திரி


மார்ச் - தெலுங்கு வருடப்பிறப்பு


ஏப்ரல் - ராமநவமி – தமிழ்ப்புத்தாண்டு


மே – 6ம் தேதி ஈஷ்வராம்பா தினம்


JULY – குருபூர்னிமா


ஆகஸ்ட் – வரலட்சுமி விரதம் , பவான் கிருஷ்ண ஜயந்தி
- ஓனம் பண்டிகை, சுதந்திர தினம்


ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் - விநாயக சதுர்த்தி


அக்டோபர் - நவராத்திரி – விஜயதசமி


நவம்பர் – தீபாவளி


நவம்பர் – உலகளாவிய அகண்ட பஜன் (Global bajan )
நவம்பர் – 22 பகவன் சத்ய சாய் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

நவம்பர் – 23 பகவான் சத்ய சாய் பகவான் பாபா ஜென்ம தினம்


டிசம்பர் – கிருஸ்துமஸ் விழா


தொடரும்....

No comments: