Followers

Saturday, April 26, 2008

puttaparththi ---- 8



புட்டபர்த்தி தற்சமயம் கிராமமா - நகரமா என்று நாம் நினைத்து அதிசயிக்கும் அளவில் ஓர் விஸ்தீரணமாயும் , தினந்தோறும் பற்பல நாட்டினர், மக்கள் ஜாதி - மொழி- இனம் -ஆண்- பெண் படித்தோர் பாமரர் என எவ்வித பாகுபாடுமின்றி அவனிதோரும் ஆயிரக்கணக்கில் பர்த்திக்கு வருகை புரிந்தவண்ணம் இருக்கின்றனர். எல்லோரும் தங்கு வதற்கு லாட்ஜுகளும் உணவு விடுதிகளும் (Lodge and Restaurasnt) ஆஸ்ரமத்தைச் சுற்றி அமைந்துள்ள இடங்களிலும் வசதியுடன் கிடைக்கின்றன. ஊர்நடுவில் அமைந்துள்ள பகவான் பாபாவால் கட்டிக் கொடுக்கப்பட்ட பஸ் ஸ்டான்ட்(Bus Stand) சுறுசுறுப்பாய் இயங்குகின்றது. கடைகள் காய்கறி பழவக மார்கெட்கள் பாங்க்(Bank) மற்றும் உள்ளூர் ,வெளியூர் ,வெளிநாடு தொலைபேசிவசதிகள் (Local, STD, ISD Telephone - Public booth) யாவும் நிறைய இருக்கின்றன. ரயில் மூலமும் பஸ் மூலமும் (Roadways/Railways) அவரவர் ஊர்களுக்கு போய்வர பஸ் ஸ்டாண்ட்லேயே டிக்கெட்கள் பதிவு (Reservation) செய்யப்படுகின்றன. புட்டபர்த்தியிலும் பிரசாந்தி அஸ்ரமத்திலும் பக்தர்களுக்கு தேவைப்படும் உதவிகள் ஆலோசனைகள் வசதிகள் ஒழுக்க கட்டுப்பாடுகள் யாவையும் தினந்தோறும் அங்கு வந்திருந்து உன்னத சேவை புரியும் ஆண் ,பெண் சேவாதள தொண்டர்கள் கண்ணும் கருத்துமாய் நம்மை பாதுகாக்கிறார்கள்.



பகவான் பாபா அவர்கள் தம் 65வது பிறந்த தினவிழா அன்று அறிவித்தபடி புட்டபர்த்தி ஊருக்கு சுமார் 6 கிலோமீட்டர் முன்னால் 108 கோடி ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச “சூப்பர் ஸ்பெசலிடி ஆஸ்பத்திரி” (International Super Speciality Hospital) இன்று சுமார் 300 கோடி ரூபாய் வரையிலும் 150 ஏக்கர் நிலப்பரப்பில் “ஓம்” என்னும் வடிவிலும் பக்கிங்காம் அரண்மனை (Backingham palace) போல் காட்சி தரும் வகையிலும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. இம் மருத்துவ மனையில் இதய சிகிச்சை ,(Heart disease)அதற்குரிய அறுவை சிகிச்சை, (Heart surgeory)சிறு நீரக கோளாறு, (Kidney disease)அதற்குறிய மாற்று சிறு நீரகம் பொருத்தும் சிகிச்சை, (Kidney transplantation)கண் நரம்பு சம்பந்தமான சிகிச்சைகள், (Eye Department)மேலும் பல விதநுட்பமான அறுவை சிகிச்சைகள் (complicated surgeory) யாவும் ஏழைகளுக்கு (எல்லோருக்கும்) எவ்வித கட்டணமுமின்றி இலவசமாகவே செய்யப்படுகின்றன. நோயாளிகளுக்கு சிகிச்சை முடியும் வரை இலவச உணவும் வழங்கப்படுகின்றன. மேலும் இம் மருத்துவக் கூடத்திற்கு தலை சிறந்த வெளி நாட்டு சிறப்பு டாக்டர்கள் உலகின் பல பாகங்களிலிருந்து அவ்வப்போது வந்திருந்து இலவசமாக சிகிச்சை செய்து கொடுப்பது பகவான் பாபாவின் மஹிமையே எனலாம். இம் மருத்துவமனையின் சுற்றுப்புற சுகாதார சூழலும், டாக்டர்கள் ,நர்ஸ்களுடைய கனிவு மிக்க கவனிப்பும் சேவாதள சகோதர சகோதரிகளின் சுறுசுறுப்பான சேவைப்பணிகள் ஆகிய இவற்றை பார்க்கையில் நம் பாரத நாட்டிலேயே இவ் ஆஸ்பதிரி ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது என்பதை உறுதிபட கூறலாம்.



இத்தகு சிறப்பு பெற்றுள்ள சூப்பர் ஸ்பசலிடி மருத்துவ மனை ஆரம்பிக்கப்பட்ட இப் பத்து வருடங்களுக்குள் ஏற்கனவெ 12,000 இதய அருவை சிகிச்சைகள் இலவசமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன என்றும் தம்முடன் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லாத தனி மனிதர் (ஒருவர்) இவ் ஆஸ்பத்திரிக்கு (பெங்களூரில் அண்மையில் இது போல் இன்னொரு ஓர் பெரிய ஆஸ்பத்திரி பகவான் பாபாவின் பெருங்கருணையினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது) (Whitefield Super speciality hospital at Bangalore) யு எஸ் (United States of America)இலிருந்து 600 கோடி ரூபாய் அனுப்பிவைக்கும் தகவல் தமக்கு வந்திருப்பதாகவும் இதில் 300 கோடி ரூபாய் பங்களூர் ஆஸ்பத்திரிக்கும் 200 கோடி ரூபாய் புட்டபர்த்திக்கும் 100 கோடி ரூபாய் கல்வி நிறுவனங்களுக்கும் (Educational Institutions) என டெபாசிட் செய்து அதில் சேரும் வட்டித் தொகையிலிருந்தே இவற்றை பராமரிப்பதாகவும் தமக்கென தனிப்பட்ட ஆசைகள் எதுவும் கிடையாது என்றும் தமது கரம் எப்பொழுதும் மேலேயேதான் இருக்கும் (கொடுக்கும் கரம்) எப்போதும் கீழே போகாது (வாங்கும் கரம்) தமது கரம் அன்புக்காக மட்டுமே நீட்டப்படுகின்றன என மனம் திறந்து மகிழ்ந்து பக்தர்கள் முன்னிலையில் பகவான் பாபா அவர்கள் 11.8.2001 அன்று நடைபெற்ற பகவான் கிருஷ்ண ஜெயந்தி விழாவன்று தமது அருளுரையில் விளக்கியிருப்பது நினைக்க நெஞ்சம் பூரிக்கிறது.


புட்டபர்த்தியில் ஏற்கனவே விமானநிலையம் (Airport) ஒன்று அமைந்திருப்பது பிரசாந்தி நிலையத்திற்கு மேலும் ஓர் அணிகலணாகும். விமானம் (Airways) மூலம் வர வாய்ப்புள்ள பக்தர்களும், வெளி நாட்டு சகோதர சகோதரிகளும் நேரடியாக எளிதாக புட்டபர்த்திக்கு வந்து போகும் பாக்கியம் பெற்றிருப்பது பகவானின் பெருங்கருணையே எனலாம்.


தொடரும்


No comments: