Followers

Sunday, April 27, 2008

Puttaparththi - 9

“சைதன்ய ஜோதி" ஆன்மீக அருங்காட்சியகம்

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பகவான் பாபாவின் அருட் கடாட்சத்தினால் பாபாவின் பவழ விழா ஆண்டில் நமது மத்திய அரசாங்காம் (Central Government) 3 கோடி ரூபாய் செலவில் சலவை கற்கள் (Marble) பதித்த அழகிய ரயில்வே நிலயம் (Railway Station) புட்டபர்த்தியில் அமைத்திருக்கிறார்கள். “பகவான் சத்ய சாயி பிரசாந்தி நிலையம்” பெண்ணுகொடா என்ற ரயில் நிலயத்திலிருந்து 9 கிலோ மீட்டர் இருப்புபாதை அமைக்கப்பட்டு இனி நேரிடையாக புட்டபர்த்திக்கே ரயிலில் போய் இறங்கலாம். சென்னையில் (Chennai) இருந்து புட்டபர்த்திக்கு நேரடி ரயில் விடப்போகிறார்கள்.



இவ்வாறு பல வழிகளில் வ்ளர்ச்சி பெற்று வரும் புட்டபர்த்திக்கு இப்பூவுலகில் தனக்கென ஒரு நிலையான நிரந்தர ஸ்தானம் கிடைத்திருக்கிறது எனில் அது மிகையில்லை. மேலும் “சைதன்ய ஜோதி” (Chaithanya Jothi) என்று உலகளாவிய ஆன்மீக அருங்காட்சியகம்(Museum) ஒன்று மிகப்பெரிய அளவில் புட்டபர்த்தியில் உருவாகி இருக்கிறது. சீனா(China) பாணிக் கட்டடமான இதன் மேற்கூறைப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள சலவைக்கற்கள் சீனாவிலிருந்து (China marbles)வரவழைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் நாட்டின் அம்சமாக மதுரை மீனாட்சி திருமணக்கோல(Madurai Meenakshi Amman) வண்ண ஓவியம் இடம்பெற்று இருக்கிறது என்பது நம் தமிழ் நாட்டிற்கோர் பெருமை எனலாம்.


2 comments:

Anonymous said...

மிக அருமையான பதிவு. மேலும் பதிவுகளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். ஜெய் சாய் ராம்.

Anonymous said...

நல்ல ஒரு பதிவு - சுப்பு